Top 10 Headlines: அதிமுக நிர்வாகி விபரீத முடிவு.. மமதா பானர்ஜிக்கு பின்னடைவு.. 11 மணி செய்திகள் இதோ!
பேச்சி ஆவுடையப்பன் June 01, 2026 02:14 PM
- அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்னை காரணமாக தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்கள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
- தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் வண்ணம் திருச்சி கிழக்கில் இன்று நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- தமிழகத்தை சேர்ந்த கோவை மூத்த வழக்கறிஞர் வி. மோகனா உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
- ஜூன் 1ம் தேதியான இன்று பெட்ரோல், டீசல், வர்த்தக சிலிண்டர் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்
- ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வென்ற நிலையில் இந்தியா முழுவதும் உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது.
- கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- திருத்தணி கோவிலில் மொட்டை அடிக்க பக்தர்களிடம் பணம் வசூலித்த 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக கோயிலில் நடைபெறும் முறைகேட்டில் நடவடிக்கை எடுக்கும் தவெக அரசுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
- மாநிலங்களவையில் காலியாக உள்ள ஒரு எம்.பி., பதவிக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தவெக சார்பில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சவரன் ரூ.1,16,000க்கும், ஒரு கிராம் ரூ.14,500க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏ.,க்களில் 60 பேர் கூட்டத்திற்கு வராததால் மமதா பானர்ஜி அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் வேறொரு நாளில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி அதிக ரன்கள் குவித்த வைபவ் சூரியவன்ஷி டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். அதுதான் உண்மையான கிரிக்கெட் எனவும் அவர் கூறியுள்ளார்.
- சென்னை கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யபப்ட்ட விவகாரத்தில் 3 பேர் கைது. மீதமுள்ள 3 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இளம்பெண் சென்ற பாரில் ஏற்பட்ட சண்டையே கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
- AI திறன்களைக் கற்பதில் இந்தியப் பெண்கள் முதலிடம் பிடித்துள்ளனர். இரண்டாமிடத்தில் அமெரிக்காவும், 3ம் இடத்தில் கனடாவும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருச்சியில் நன்றி சொல்லும் விஜய்! தமிழ்நாட்டில் வெயிலுக்கும் மழைக்கும் வாய்ப்பு - 10 மணி பரபரப்பு