“இனி பட்டா, சான்றிதழுக்கு அலைய வேண்டாம்!” 15 நாட்களில் வேலை முடியும்.. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சொன்ன குட் நியூஸ்..!!”
SeithiSolai Tamil June 13, 2026 10:48 AM

சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வருவாய்த்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய மூன்று துறைகளும் இணைந்து பொதுமக்களின் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, பட்டா மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல், முதியோர் உதவித்தொகை போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்ற 5 நாட்களுக்குள் பரிசீலித்து, 15 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக அவர் கூறினார்.

மேலும், பத்திரப்பதிவின்போதே தவறுகள் ஏற்படாதவாறு துல்லியமாகப் பதிவு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தென்மேற்கு பருவமழை குறித்துப் பேசிய அமைச்சர், மழை மிதமான அளவிலேயே இருப்பதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், பேரிடர் காலத்தைச் சமாளிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

பட்டா மாற்றங்களில் ஏற்படும் சிறு சிறு குறைகளைக் களைய வருவாய்த்துறை தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.