இரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வந்தபோது, கும்பகர்ணனைப் போல அசந்து தூங்கிக் கொண்டிருந்த பயணி ஒருவர், சோசியல் மீடியாவில் பெரும் வைரலாகி வருகிறார். இந்த விசித்திரமான சம்பவம் ஒரு குறிப்பிட்ட இரயில் பயணத்தின் போது நிகழ்ந்துள்ளது. அங்கு வந்த, அந்தப் பயணியிடம் டிக்கெட்டைக் கேட்பதற்காக அவரை எழுப்ப முயன்றார்.
ஆனால், அந்த நபர் ஆழமான தூக்கத்தில் இருந்ததால், அவரைப் பலமுறை தட்டியும், கையைப் பிடித்து உலுக்கியும் அவரால் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. அங்கிருந்த சக பயணிகள் அனைவரும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையிலும், அந்தப் பயணி எதற்கும் அசராமல் தனது ‘கும்பகர்ண’ தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
“>
மேலும் டிக்கெட் பரிசோதகர் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தப் பயணியிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை, மேலும் அவரது டிக்கெட்டையும் சரிபார்க்க இயலவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த, ஒருகட்டத்தில் அவரை எழுப்புவதைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
இந்த முழு சம்பவத்தையும் சக பயணி ஒருவர் தனது மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நகைச்சுவையான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருவதுடன், நெட்டிசன்கள் பலரையும் தங்களது கருத்துக்களைப் பகிர வைத்துச் சிரிக்க வைத்துள்ளது.