“இந்த ஒன் மன்த்ல பெரிய சாதனையா ஒன்னும் பாக்கல” CM விஜய்யின் 'ஹனிமூன் பீரியட்' குறித்து திவ்யா சத்யராஜ் 'பளீர்' கமெண்ட்….!!
SeithiSolai Tamil June 15, 2026 08:48 PM

தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் ஒரு மாத கால ஆட்சி மற்றும் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப் பெண்’ படையின் செயல்பாடுகள் குறித்துப் பிரபல சமூக ஆர்வலர் திவ்யா சத்யராஜ் அவர்கள் தனது சமீபத்திய பேட்டியில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அவர், தேவையின்றி யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் தான் விரும்பவில்லை என்றும், ஆனால் கடந்த ஒரு மாத கால புதிய ஆட்சியில் பெரிய அளவிலான சாதனைகள் எதையும் தம்மால் பார்க்க முடியவில்லை என்றும் ஓப்பனாகக் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை தான் அதைச் சரியாகக் கவனிக்காமல் கூட இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய முதலமைச்சர் ஆட்சி அமைத்ததற்கான ஒரு ‘ஹனிமூன் பீரியட்’டை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது என்று விமர்சித்துள்ளார். ​மேலும், முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கழித்துத்தான் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்குவார் போல எனத் தனது பேட்டியில் திவ்யா சத்யராஜ் அதிரடியாகக் கமெண்ட் அடித்துள்ளார். அரசின் புதிய திட்டமான ‘சிங்கப்படை’ நடவடிக்கைகள் தற்போதுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றின் செயல்பாடுகள் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக, பெண்கள் பாதுகாப்புக்காகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த படையினர், தங்களது முதல் கட்ட நடவடிக்கையாகச் சமூக வலைத்தளங்களில் பெண்களை மரியாதையுடன் நடத்துவதை உறுதி செய்வதை ஒரு தொடக்கமாகக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஒரு மாத கால ஆட்சி குறித்து திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள இந்த பளீர் கருத்துக்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.