Vijay TV: விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் எப்போதுமே அறுவையாக இழுக்காமல் கதை சரியாக செல்லவில்லை என்றாஅல் சில நூறு எபிசோட்களிலே இழுத்து மூடி விடுவார்கள். ஆனால் தற்போது இன்னொரு சம்பவம் விவாதமாகி இருக்கிறது.
பரபரப்பாக இழுக்காமல் வித்தியாசமான கதைகளை எடுத்து பெயர் பெற்றது விஜய் டிவி. அந்த வகையில் பாரதி கண்ணம்மா தொடங்கி தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை பல ஆயிரம் எபிசோட் சென்றது.
இதில் ஹைலைட்டாக விஜய் தொலைக்காட்சி டப் செய்த சீரியல்களுக்கு மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை, மகாநதி உள்ளிட்ட முக்கிய சீரியல்கள் மற்ற மொழிக்கு டப் செய்யப்பட்டு புகழ் பெற்றது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பல மொழிக்கு டப் ஆனது.
இப்படி நல்ல ஹிட் அடித்த சீரியலை விட்டுவிட்டு ஓடாத சீரியலுக்கு தான் மூடுவிழா நடக்கும். ஆனால் தற்போது மகாநதி சீரியலை முடிக்க டிவி நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது. இந்த சீரியலின் ஹீரோ ஹீரோயினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.
அதை கதை இல்லை என முடித்து விட்டுள்ளனர். ஆனால் ஒரே விதமான கதையை மாற்றி மாற்றி ஒட்டிக்கொண்டு இருக்கும் சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் ஒரு மணி நேர தொடராக ஒளிபரப்பாக இருக்கிறது. இதெல்லாம் உங்களுக்கு நியாயமா இருக்கா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.