ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் திரையரங்கைத் தொடர்ந்து தற்போது ஓடிடியிலும் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. கருப்பு படத்தில் நடிகர் ஆர்யா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததாகவும் இந்த காட்சிகள் படத்தில் இடம்பெறாத காரணம் குறித்து ஆர்யா பேசியுள்ளார்
ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் 45 ஆவது படமாக கருப்பு படம் அறிவிக்கப்பட்டது. மே 14 ஆம் தேதி வெளியாக இருந்த கருப்பு நிதி சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தடைபட்டது. பல்வேறு சவால்களை சந்தித்த படக்குழு மனம் தளராமல் இப்படம் நிச்சயம் பெரிய வெற்றிபெறும் என நம்பினர். நடிகர் சூர்யா தன்னால் முடிந்த உதவிகளை செய்து மே 15 ஆம் தேதி கருப்பு படம் மே 15 ஆம் தேதி வெளியானது. படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் நம்பியது போல் கருப்பு திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது. உலகளவில் இப்படம் ரூ300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூர்யாவின் கரியரில் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. திரையரங்கைத் தொடர்ந்து கருப்பு தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது
நடிகர் ஆர்யா கருப்பு படம் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார். கருப்பு படத்தில் தான் ஒரு சிறிய காட்சியில் நடித்ததாகவும் ஆனால் ஃபைனல் எடிட்டில் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக ஆர்யா தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் படத்துடன் சரியாக ஒட்டாததால் காட்சிகளை நீக்குவதாக இயக்குநர் ஆர் ஜே பாலாஜி தன்னிடம் தெரிவித்ததாக ஆர்யா தெரிவித்துள்ளார்
Arya talks about his Deleted Scenes in #Karuppu💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 16, 2026
“I did a small role, it was an experimental attempt. RJB later called me & said it didnt get along with the film, so going to remove those scenes. We will work together later in another project”🤝 pic.twitter.com/pzl79bT5HA