“அப்பா, அம்மா என்னை மன்னிச்சிடுங்க”.. நீச்சல் குளத்தில் அசைவற்று மிதந்த 6 வயது சிறுவன்.. ஆடைகளோடு பாய்ந்த 'ICE' அதிகாரி.. மரணத்தை வென்ற அந்த 5 நிமிட திக் திக் நிமிடங்கள்..!!
SeithiSolai Tamil June 18, 2026 08:48 PM

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில், ஆறு வயது சிறுவன் ஒருவன் சுயநினைவின்றி தண்ணீரில் மிதந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

மேலும் அப்போது அங்கு வந்த ‘ஐசிஇ’ அதிகாரி கிரிகோரி சிம்மண்ட்ஸ் சிறுவன் ஆபத்தில் இருப்பதை நொடிப் பொழுதில் உணர்ந்தார். உடனே அவர் சற்றும் யோசிக்காமல், தான் அணிந்திருந்த உடைகளுடனேயே தண்ணீரில் குதித்து, அந்தச் சிறுவனை மீட்டெடுத்தார்.

“>

இந்த நெஞ்சை உலுக்கும் தத்தளிப்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி  கேமராவில் பதிவாகி, தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நீச்சல் குளத்தில் இருந்து சிறுவனை வெளியே கொண்டு வந்த அதிகாரி சிம்மண்ட்ஸ், உடனடியாக அவனுக்கு முதலுதவியாக சிபிஆர் சிகிச்சையை அளித்தார்.

இந்நிலையில் மருத்துவக் குழுவினர் வருவதற்குள் அவர் தொடர்ந்து போராடி முதலுதவி அளித்ததால், அந்தச் சிறுவன் மீண்டும் தன் சுயநினைவைப் பெற்றான். சரியான நேரத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டு ஒரு மழலையின் உயிரைக் காப்பாற்றிய அந்த அதிகாரியின் வீரச் செயலை, தற்போது அரசு உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டிப் புகழ்ந்து வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.