“திமுகவோட மறைமுக முகமாவே பாஜக செயல்படுது, பின்னாடி இருந்து திமுகவை இயக்குறதே அவங்கதான்!” செந்தில்பாலாஜி ஃபைல்ல கையெழுத்துப் போடாம ஆளுநர் ஏன்இன்னும் தேக்கி வச்சிருக்காரு? – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி..!!
SeithiSolai Tamil June 18, 2026 10:48 PM

பாரதிய ஜனதா கட்சிக்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேதான் நெருக்கமான உறவு உள்ளது என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் மறைமுக முகமாகவே பாஜக செயல்பட்டு வருவதாகவும், பின்னாடி இருந்து திமுகவை இயக்குவதே அக்கட்சிதான் என்றும், இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் சாடினார்.

மேலும், பல்வேறு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியும் இதுவரை எந்த கோப்பிலும் கையெழுத்தாகவில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் கோப்புக்கு ஆளுநர் ஏன் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் தேக்கி வைத்துள்ளார் என கேள்வி எழுப்பினார்.

கவர்னரும், திமுகவும், பாஜகவும் இணக்கமாக ஒன்றாகவே இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய அவர், செந்தில்பாலாஜி மீதான கோப்பில் ஆளுநர் கையெழுத்திடாதது ஏன் என்பதற்கு திமுகதான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.