ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகன்.. ஜோடியாகும் கிரித்தி ஷெட்டி!
TV9 Tamil News June 18, 2026 11:48 PM

கோலிவுட் சினிமாவில் பல கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படங்களை இயக்கி பான் இந்திய சினிமா வரையில் பிரபலமானவர் ஷங்கர் (Shankar). இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இறுதியாக தெலுங்கில் நடிகர் ராம் சரணை (Ram Charan) வைத்து இயக்கியிருந்த படம்தான் கேம் சேஞ்சர் (Game Changer). கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகியிருந்த இப்படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஷங்கர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த படங்களையும் இயக்கவில்லை. இந்நிலையில் இவர் இயக்குநராக பிரபலமானதை அடுத்ததாக, தற்போது இவரின் மகன் அர்ஜித் ஷங்கர் (Arjith Shankar) சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

ஏற்கனவே ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்திவரும் நிலையில், இவரை அடுத்தாக அவரின் சகோதரன் அர்ஜித் ஷங்கரும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறாராம். இப்படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாம்.அந்த வகையில் இப்படத்திற்கு லவ்வர் பாய் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பூஜை புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க:அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி – 16 ஆண்டுகளைக் கடந்தது ராவணன் படம்!

ஷங்கரின் மகனுக்கு ஜோடியாக நடிக்கும் தென்னிந்திய இளம் நடிகை:

இயக்குநர் ஷங்கரின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படத்தை, இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குநராக பணியாற்றிவந்த அசோக் குமார்  இயக்கத்தில், லவ்வர் பாய் படமானது முழுக்க ரோமெண்டிக் காதல் மற்றும் காமெடி கதைக்களத்துடன் தயாராகவுள்ளது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் தேஜஸ் கிருஷ்ணா என்பவை இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: நூறு சாமி முதல் சின்ன சின்ன ஆசை வரை… தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

இப்படத்தில் அர்ஜித் ஷங்கருக்கு ஜோடியாக இளம் நடிகையான கிரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சிம்பிளாக சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத் மற்றும் ஜேசன் சஞ்சய் பிரபலங்கள் உள்ளிட்ட கலந்துகொண்டுள்ளனர். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் சிறப்பாக நடைபெறவுள்ளதாம்.

அர்ஜித் ஷங்கர் ஹீரோவாக நடிக்கவுள்ள புது படம் ஷூட்டிங் பூஜை புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு:

An auspicious start to a journey filled with love, laughter, and rosy beginnings ❤️

#LoverBoy@arjith_shankar @IamKrithiShetty#Ashok @PassionStudios @KvnProductions @Sudhans2017 #Sarath #Sneha #Shaji @Vinodhiniynoffl #Kanishka @808krshna @dopkalai @kalaivananoffl @DuraiKv… pic.twitter.com/EwipXJ6poI

— Passion Studios (@PassionStudios_) June 18, 2026

ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். அதனால் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.