“உலக அரங்கில் மின்னிய தமிழ் மூளை!”.. 13 வயசுல நாசா மாநாட்டில் கெத்து காட்டிய தமிழ்நாட்டு மாணவர்.. சர்வதேச மேடையில் இந்தியாவிற்குப் பெருமை..!!!
SeithiSolai Tamil June 19, 2026 12:48 AM

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வயது மாணவன் ஒருவர் பங்கேற்றுச் சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள மாஸ் சுவாரசியச் செய்தி தற்பொழுது ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் சோசியல் மீடியா ஏரியாவில் மிகப்பெரிய நெகிழ்ச்சியையும் பெருமையையும் கிளப்பியுள்ளது.

வெறும் 13 வயதே ஆன ஹரி துவாரகன் என்ற அந்த இளம் தமிழ் மாணவன், புகழ்பெற்ற நாசா NSS (National Space Society) மாநாட்டில் நேரடியாகப் பங்கெடுத்து, சர்வதேச மேடையில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய வரலாற்றுப் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.

இந்த உலகளாவிய விண்வெளி மாநாட்டில், எதிர்கால மனிதர்களுக்கான விண்வெளி குடியேற்றம் (Space Settlement) தொடர்பாகத் தான் துல்லியமாக வடிவமைத்த புதுமையான ‘ASTRO ZENITH ERA’ என்ற பிரம்மாண்ட திட்டத்தை உலக அரங்கில் அறிமுகப்படுத்தி அங்கிருந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களை அடியோடு வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

13 வயதிலேயே விண்வெளி அறிவியல் துறையில் அசாத்தியத் திறமையுடன் உலக மேடையை அதிரவைத்து, சர்வதேச அளவில் பல்வேறு முக்கியப் பாராட்டுகளை அள்ளிக் குவித்து வரும் இந்த தமிழ் சிறுவனின் விண்வெளி சாதனைத் தகவல் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களிலும் காட்டுத்தீயாய் பரவி, “நம்ம ஊர் பசங்களோட அறிவுக்கு ஈடு இணையே இல்லை , 13 வயசுல நாசாவுக்கே போய் சாதிச்ச ஹரி துவாரகனுக்கு நம்முடைய வாழ்த்துகள்!” என்று நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அள்ளிக்கொட்டும் லைக்ஸ்களுடன் இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.