Jiiva: இனி ஜாலி மோட்தான் மச்சி… ஜீவாவின் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' பட ஃபர்ஸ்ட் லுக் – டீசர் எப்போது?
TV9 Tamil News June 18, 2026 09:48 PM

கோலிவுட் சினிமாவில் ஒரு நேரத்தில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஜீவா (Jiiva). இவரின் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகியிருந்தாலும், முன் இருந்தது போல இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. ஆனாலும் தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்துவருகிறார். இந்த வரிசையில் 2026ம் ஆண்டு தொடக்கத்திலே இவர் கொடுத்த ஹிட் படம்தான் தலைவர் தம்பி தலைமையில் (Thalaivar Thambi Thalaimaiyil). அரசியல் மற்றும் காமெடி கதைக்களத்தில் வெளியாகியிருந்த இப்படமானது ஜீவாவிற்கு இருப்பன வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவா நடித்துவந்த புதிய திரைப்படம்தான் ஜாலியா இருந்த ஒருத்தன். இப்படத்தை சிவா மனசுல சக்தி (SMS) பட புகழ்பெற்ற இயக்குநர் எம்.ராஜேஷ் (M Rajesh) இயக்க, மாலிக் ஸ்ட்ரீம் கார்பிரேஷன் என்ற தயாரிப்பு நிறுவனமானது சிறப்பாக தயாரித்துள்ளது.

இப்படத்தில் ஜீவா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லவ் டுடே பட புகழ் இவனா (Ivana) நாயகியாக நடித்துள்ளார். இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், இன்று 2026ம் ஆண்டு ஜூன் 18ம் தேதியில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஜீவா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி – 16 ஆண்டுகளைக் கடந்தது ராவணன் படம்!

நடிகர் ஜீவா பகிர்ந்த ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பதிவு:

We are Back!

Here is the first look of #JolliyaIrunthaOruthan – Ini full Jolly mode dhaan Machi! #JIO Teaser drops on 21st June.

Produced by @malikstreams #datoabdulmalik
Co Produced by @Razikahamed16

Starring @jiivaofficial

A @rajeshmdirector Film

An @thisisysr Musical… pic.twitter.com/6MmBsnxMyG

— Jiiva (@JiivaOfficial) June 18, 2026

ஜாலியா இருந்த ஒருத்தன் பட டீசர் ரிலீஸ் எப்போது:

இந்த படத்தில் ஜீவா மற்றும் இவானாவுடன் நடிகர்கள் பரிதாபங்கள் சுதாகர், ரித்திகா, ராஜ் அய்யப்பன், பகவதி பெருமாள் மற்றும் அனிஷ் யோகன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது சிவா மனசுல சக்தி படம் போலவே அதிரடி காதல் மற்றும் ஆக்ஷன் காமெடி கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார்.

இதையும் படிங்க: பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை சியாமந்தா.. குவியும் வாழ்த்து!

இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்களும் சிறப்பாக தயாராகியுள்ளதும். இப்படமானது சிறப்பான பட்ஜெட்டில் உருவாகிவரும் நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. அந்த வகையில் இப்படத்தின் டீசர் வரும் 2026ம் ஆண்டு ஜூன் 21ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் டீஸருடன் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.