முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதி தேர்தல் தோல்வியும், கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு துர்கா ஸ்டாலினால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவமும், திமுகவுக்குள் அடுத்தடுத்த அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. சேகர்பாபுவை வீட்டை விட்டு விரட்டியடித்த அன்றைய இரவே, மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வந்ததும் துர்கா அம்மையார் தனது ஒட்டுமொத்தக் கோபத்தையும் அவரிடம் கொட்டியுள்ளார்.
“தலைவரைத் தோற்கடிக்கச் சதி செய்த சேகர்பாபுவோட சென்னை மாவட்ட செயலாளர் பதவியைத் தட்டிப்பறிச்சுட்டு, நம்ம குடும்பத்துக்கு விசுவாசமா இருக்குற வேற யாருக்காவது கொடுங்க” என்று கறாராகக் கூறிவிட்டாராம். துர்கா அம்மையாரின் இந்த ஆக்ரோஷமான உத்தரவால், சேகர்பாபுவின் மா.செ. பதவி பறிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், திமுக மேலிடத்தில் அடுத்த கட்ட விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில், “ஒருவேளை பதவி போனால் சேகர்பாபு அரசியலை விட்டே விலகுவாரா? அல்லது அவர் அடிப்படையில் ஒரு தீவிர ஆன்மீகவாதி என்பதால், அடுத்த ஆப்ஷனாக ஆன்மீகக் கட்சியான பாஜக-வுக்கே குதித்துவிடுவாரா?” என்று அரசியல் வட்டாரத்தில் இப்போதே விவாத அனல் பறக்கிறது. சென்னை திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த சேகர்பாபுவின் அரசியல் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்ற அதிரடி கேள்விகளுடன் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நீடித்து வருகிறது.