சென்னைப் பல்கலை. தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
GH News August 23, 2024 08:06 AM

சென்னை: தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் , முதுகலை மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றன. இத்தேர்வுகளின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ideunom.ac.in) நாளை மாலை 6 மணிக்கு மேல் தெரிந்துகொள்ளலாம். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக எஸ்.ஏழுமலை தெரிவித்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.