எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு: சென்னையில் இன்று நேரடியாக நடைபெறுகிறது
GH News August 23, 2024 10:09 AM

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. சிறப்புபிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்றுநேரடியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான பொதுகலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் ஆர்வமாக ஆன்லைனில் பதிவு செய்து கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்து வருகின்றனர்.

இந்த நடைமுறை வரும் 27-ம்தேதி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதிதரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தற்காலிக இடஒதுக்கீடு விவரங்கள் 29-ம் தேதியும், இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் 30-ம் தேதியும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.