சென்னை: அரசு நடுநிலைப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி மற்றும் நூல் வாசிப்பு, நுண் கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவில் புகழ் பெற்ற இடங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு முதல்கட்டமாக 20 மாணவர்கள் ஹாங்காங் நாட்டுக்கு கல்வி சுற்றுலாவாக நேற்று புறப்பட்டுச் சென்றனர். மாணவர்கள் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை ஹாங்காங்கில் இருப்பார்கள்.