சென்னை: தொலைதூரக் கல்வி தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியிருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் பிஎட், டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கான ஜூன் பருவ தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாணவர்கள் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தை (www.ideunom.ac.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை தெரிவித்துள்ளார்.