சுண்டைக்காயில் சட்னி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
சுண்டைக்காய்
சின்ன வெங்காயம்
தேங்காய்
வரமிளகாய்
பூண்டு
உப்பு
புளி
கறிவேப்பிலை
கடுகு
சீரகம்
கடலெண்ணெய்
செய்முறை:-
சுண்டைக்காயை நன்றாக உப்பு போட்டு கழுவி லேசாக தட்டி அதில் உள்ள விதைகளை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி கடலெண்ணெய் விட்டு சுண்டைக்காயை நன்றாக வதக்க வேண்டும். சுண்டைக்காய் வதங்கிய பின் அதை ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.
பின்னர் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதில் சீரகத்தை சேர்த்து நன்றாக கலந்து, சின்ன வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
இது நன்கு வதங்கிய பின் அதில் 5 கொத்து கறிவேப்பிலை, வர மிளகாய், புளியை சேர்த்து வதக்கி ஆற விட வேண்டும்.
இதனை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் ருசியான சுண்டைக்காய் சட்னி தயார்.