சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு.. 32 லட்சம் பேர் தரிசனம்... ரூ.332.77 கோடி வருமானம்!
Dinamaalai December 28, 2025 12:48 PM

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜை நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் மண்டல காலமான இந்த 41 நாட்களில் சபரிமலைக்கு மொத்த வருமானம் சுமார் ரூ.332.77 கோடி என்றும், இந்த 41 நாளில் சுமார் 32 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வருமானம் சுமார் ரூ.35 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. அரவணை பாயாசம் விற்பனை மூலமாக சுமார் ரூ.145 கோடி - ரூ.150 கோடி. உண்டியல் காணிக்கை: சுமார் ரூ.100 கோடி - ரூ.110 கோடி. அப்பம் மற்றும் இதர விற்பனை: மீதமுள்ள தொகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் தனுசு ராசியில் ஐயப்பனுக்குச் சிறப்பு 'மண்டல பூஜை' நடைபெற்றது. இதற்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

மண்டல பூஜை முடிந்து நேற்றிரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் மகரவிளக்கு திருவிழாவிற்காக வரும் டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். சிகர நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் வரும் ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.