ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளர்கள் அனைவரும் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்களது e-KYC சரிபார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியற்ற கார்டுகளைக் கண்டறியவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையைச் சரியான காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டியது அவசியம். இந்தச் சரிபார்ப்பை முடிக்கத் தவறினால், வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்களின் வசதிக்காக இந்த e-KYC முறையை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு நேரடியாகச் சென்றோ அல்லது அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனிலோ இந்தச் சரிபார்ப்பைச் சுலபமாக முடித்துக் கொள்ளலாம். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கவும், தடையின்றி ரேஷன் பொருட்களைப் பெறவும் இப்போதே இந்தச் சரிபார்ப்பை முடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.