CAT 2024 Registration: ஐஐஎம்களில் எம்பிஏ படிக்கணுமா? கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
மாய நிலா September 20, 2024 02:44 PM

நாடு முழுவதும் புகழ்பெற்ற மேலாண்மை நிறுவனங்களான ஐஐஎம்களில் எம்பிஏ எனப்படும் முதுகலை மேலாண்மைப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளில் சேர கேட் (CAT – Common Admission Test)  என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் நாடு முழுவதும் நடத்தப்படும் இந்தத் தேர்வை 170 தேர்வு மையங்களில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். 2024ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சி, உதய்பூர், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் ஐஐஎம்கள் செயல்பட்டு வருகின்றன.

விண்ணப்பிக்க என்ன தகுதி?

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான சி.ஜி.பி.ஏ.வைப் பெற்றிருப்பது முக்கியம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் இட ஒதுக்கீட்டின்கீழ் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 

கட்டணம் எவ்வளவு?

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு - ரூ.1,250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிற அனைத்துத் தேர்வர்களுக்கும் - ரூ.2500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முறை எப்படி?

இந்த ஆண்டு ஐஐஎம் கல்கத்தா கேட் தேர்வை நடத்துகிறது. பொது நுழைவுத் தேர்வு தேர்வு 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை முதல்கட்டத் தேர்வும் 2ஆவது கட்டத் தேர்வு 12.30 முதல் 2.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (செப். 20) கடைசித் தேதி ஆகும். முன்னதாக செப்.13 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 

விண்ணப்பிப்பது எப்படி?

கூடுதல் விவரங்களுக்கு: https://cdn.digialm.com/per/g06/pub/32842/EForms/CAT24/CAT_2024_Information_Bulletin.pdf

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.