ஹேக் செய்யப்பட்டது உச்ச நீதிமன்ற யூடியூப் பக்கம் - மீட்பு பணி தீவிரம்!
ஜான்சி ராணி September 20, 2024 03:44 PM

உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. யூடியூப் சேனல் யாரால் ஹேக் செய்யப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது வருகிறது. மேலும், அதை மீட்கும் மூயற்சியும் நடந்து வருகிறது. 

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் வழங்கு நேரம், நிகழ்வை அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலையாக வெளியிடுவது வழக்கம். பொதுநல வழக்குகள் மட்டுமே சேனலில் நேரலையாக ஒளிப்பரப்படும். 

உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் அடையாளம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் உச்ச நீதிமன்றம் தொடர்பான வீடியோக்கள் எதையும் காணவில்லை. அதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்தின் பயனர் பெயரிலேயே ‘ரிப்பிள்’ என்ற பெயருடன் புதிதாக கிரிப்டோகரன்சியான எக்ஸ். ஆர். பி.-யை விளம்பரப்படும் விதமாக பல வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


© Copyright @2024 LIDEA. All Rights Reserved.