தொடர் உச்சத்தில் தங்கம்... 4 நாட்களில் சவரனுக்கு ரூ1480 உயர்வு!
Dinamaalai October 19, 2024 03:48 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது . இன்றைய விலை நிலவரப்படி  கிராமுக்கு ரூ40 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7280க்கும், சவரனுக்கு ரூ320 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ58240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 107க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ107000க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.4 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ1480 அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பெடரல் வங்கியும், ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்து இருப்பதால்  சர்வதேச காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன், இந்தியாவிலும்  நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து வரிசையாக பண்டிகைகள் தான். இதனாலும் தங்கத்தின் விலை உயர்வு இருக்கலாம் எனத் தெரிகிறது.   

பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்டதன் காரணமாக தங்கத்தின் விலை திடீரென குறைந்து இல்லத்தரசிகளை உற்சாகப்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர தொடங்கி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் ஆபரண தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்த நிலையில் அதன் பின்னர் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதும், மளமளவென சரிந்தது. இறக்குமதி மீதான வரி குறைந்ததும் ஒரு சவரன் தங்கம் ரூ.51,000க்கும் கீழாக சரிந்தது. மேலும் தங்கத்தின் விலை குறையும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. தங்கத்தின் விலை உயரும் போது அதிகளவில் உயர்வதும், சரியும் போது சொற்பமாக சரிவதும் என போக்கு காட்டி வருகிறது.

பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது.     இந்தியாவை பொறுத்தவரை   ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் நகையாக மட்டுமின்றி பெரும் சேமிப்பாகவும் அமைந்துள்ளது.  இந்நிலையில், சமீபகாலமாக தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே சென்றது.  இதனால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் இனி வாங்கவே முடியாதோ என்ற நிலை உருவானது.

இதனால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்கம் விலையை குறைக்க ஏதேனும் அறிவிப்பு வருமா? என மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதம் மத்திய அரசு குறைப்பதாக அறிவித்ததும் நகைப்பிரியர்கள், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.  தங்கத்தின் மீதான இறக்குமதி வரியுடன் வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபரணங்கள் விலை கணிசமாக குறையலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.