Rajini Vijay: விஜய்யின் கோட் படம் பார்த்த ரஜினிகாந்த்! சூப்பர்ஸ்டார் அடுத்து என்ன செய்தார் தெரியுமா?
சுகுமாறன் October 19, 2024 04:14 PM

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் கோட். விஜய் நடிக்கும் கடைசி படத்திற்கு முந்தைய படமாக உருவாகிய கோட் படம் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியானது. வெங்கட்பிரபு இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய் தந்தை – மகன் என இரு வேடங்களில் நடித்திருப்பார்.

நடிகர் விஜய்யின் இந்த படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம், வி.எஃப்.எக்ஸ் மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த நிலையில், தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராகவும், இந்திய திரையுலகின் உச்சநட்சத்திரமாகவும் உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவர் விஜய்யின் கோட் படத்தை பார்த்துள்ளார். கோட் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அந்த படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக, இயக்குனர் வெங்கட்பிரபு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ நன்றி தலைவா! கோட் படத்தை முழு மனதுடன் பாராட்டியதற்கு நன்றி. என்றென்றும் அன்புடன்” இவ்வாறு பாராட்டியுள்ளார்.

இணையத்தில் மோதிக் கொள்ளும் ரசிகர்கள்:

 விஜய்யின் கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். 90களில் மிகப்பெரிய கதாநாயகனாக உலா வந்த மோகன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் முக்கிய நாயகிகளாக நடித்திருப்பார்கள்.

ரஜினி – விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டு வரும் சூழலில், நடிகர் ரஜினியின் படையப்பா பாடலை கோட் படத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு ஒலிக்கச் செய்திருப்பார். வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி வெளியான நிலையில், இணையத்தில் கோட் வசூல் – வேட்டையன் வசூல் என இருவரது ரசிகர்களும் மிகவும் மோசமாக விமர்சித்துக் கொண்டனர்.

அரசியல் பயணத்தில் விஜய்:

இந்த நிலையில், ரஜினிகாந்த் விஜய்யின் கோட் படத்தைப் பார்த்து ரசிகர்களை பாராட்டியுள்ளார். அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலில் அனைவரது ஆதரவையும் எதிர்பார்த்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் சிலர் மற்றும் விஜய் ரசிகர்கள் என்ற போர்வையில் சிலர் மற்ற நடிகர்களையும், அவரது ரசிகர்களையும் தரக்குறைவாக பேசி வருவது பெரும் பின்னடைவை விஜய்க்கு ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.