நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை !
Dinamaalai October 21, 2024 05:48 AM

 நாளை அக்டோபர் 21ம் தேதி திங்கட்கிழமை அந்தமான் கடல் பகுதியில்   காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகப் போகிறது. அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய அந்தமான் கடல்பகுதியில் 5.8 கிமீ உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் மத்திய வங்கக் கடலின் கிழக்கு பகுதி, அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 21ம் தேதி  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23ம் தேதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி  மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.  அதன்படி   தமிழகத்தின் சில பகுதிகள், புதுவை காரைக்கால்  பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


நாளை  அக்டோபர் 21ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை ,  திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள்,  நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அக்டோபர் 22 மற்றும் 23ம் தேதிகளில் தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


 அக்டோபர் 24ம் தேதி தமிழகம்,  புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகள், புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.