Kashmir: தீவிரவாத தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு; உமர் அப்துல்லா, நிதின் கட்காரி சொல்வதென்ன?
Vikatan October 21, 2024 01:48 PM

நேற்று இரவு காஷ்மீரில் நடந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீரில் ஶ்ரீநஜர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அதில் பணிபுரிபவர்கள் வேலையை முடித்துவிட்டு, நேற்று (அக்டோபர் 20) இரவு தங்களது இருப்பிடத்திற்குத் திரும்பியுள்ளனர். அப்போது அந்த இருப்பிடத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உள்ளூர் மருத்துவர் உள்ளிட்ட வெளியூரைச் சேர்ந்த நெடுஞ்சாலை பணியாளர்கள் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இந்த தாக்குதல் கருதப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சோனாமார்க் பகுதியில் உள்ள ககன்கீரில் வெளியூர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கர மற்றும் கோழைத்தனமான தாக்குதல் வருத்தத்தை அளிக்கிறது. இவர்கள் அந்தப் பகுதியின் மிக முக்கிய உள்கட்டமைப்பு பணியில் பணியாற்றி வந்தவர்கள்.

இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 2-3 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆயுதம் இல்லாத மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, "ஜம்மு காஷ்மீர், சோனாமார்க், ககன்கீர் பகுதியில் மிக முக்கியமான உள்கட்டமைப்பு பணியில் பணியாற்றிய அப்பாவி தொழிலாளர்கள் மீது நடந்துள்ள பயங்கரமான தாக்குதலுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை தான், காஷ்மீரின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார் உமர் அப்துல்லா. இந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளதையொட்டி, அவரிடம் எதிர்க்கட்சியினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், காஷ்மீரைப் பொறுத்தவரை, சட்டம் ஒழுங்கு துணைநிலை ஆளுநரின் கீழ் வருகிறது. இந்த தாக்குதலுக்கு மத்திய அரசு என்ன பதிலடி தரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.