மகப்பேறு விடுப்பு எடுத்த இளம்பெண்… மீண்டும் கர்ப்பமானதால் பணி நீக்கம்… நீதிமன்ற உத்தரவால் ஷாக்கான நிறுவனம்…!!
SeithiSolai Tamil October 22, 2024 11:48 AM

Pontypridd இல் உள்ள முதல் தர நிறுவனத்தில் நிர்வாக உதவியாளராக பணியாற்றிய நிகிதா ட்விட்சன், மகப்பேறு விடுப்பில் இருந்து வேலைக்கு திரும்பினார். அப்போது தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக நிர்வாக இயக்குனர்ஜெர்மி மோர்கனிடம் தெரிவித்தார். இதனால் அவரை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்தனர். நிகிதா, தனது மகப்பேறு விடுப்பு தொடர்பாக உரிய தகவல்களை நாடும் நோக்கில், ஏப்ரல் 4ம் தேதி நிர்வாக இயக்குனருக்கு மின்னஞ்சல் அனுப்பினார்.

ஆனால் நிறுவனத்தின் மேலாளர்கள் நிதி சிக்கல்களை முன்வைத்து நிகிதாவின் பணி நீக்கத்தை உறுதி செய்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிகிதா பெண் வேலை வாய்ப்பு தீர்ப்பாயத்தில் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் முடிவில், நிகிதா ட்விட்சனுக்கு 28,000 பவுண்டுகள் (சுமார் 31 லட்சம் ரூபாய்) இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.