ஐப்பசி மாதத்தில் இந்த வழிபாட்டு முறைகளை மிஸ் பண்ணாதீங்க!
Dinamaalai October 22, 2024 11:48 AM

நம் தமிழர்கள் ஒவ்வொரு மாதத்திலும் அந்தந்த மாதத்தில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள், சீதோஷ்ண நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே திருவிழாக்களையும் வகுத்து வைத்துள்ளனர். இப்போது நடைபெற்று வரும் ஐப்பசி மாதத்தைத் துலா மாதம் என்று அழைக்கிறோம்.

துலா என்றால் தராசு. வருடத்தில், 12 மாதங்களிலும் ஒப்பிடுகையில் இந்த ஐப்பசி மாதத்தில் தான் பகலும் இரவும் சரிசமமாக இருக்கும். ஐப்பசி மாதத்தில் பல பண்டிகளைகளும், விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஐப்பசி மாதத்தில் தான் அனைத்து நதிகளும் அதன் நீரில் போக்கிய மனிதர்களின் பாவங்களை காவிரியில் கரைப்பதாக ஐதிகம். இந்த துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் முன்வினைப் பாவங்கள் நீங்கும். இந்த மாதத்திற்கு பல்வேறு ஆன்மிக சிறப்புக்கள் உள்ளன.

அவை
ஐப்பசி பௌர்ணமி

ஐப்பசி பௌர்ணமி சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும்.இந்த நாளில் சிவபெருமானுக்கு சமைத்த சாதம், காய்கறிகள் மற்றும் பழங்களால் அபிஷேகம் செய்யப்படும். நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

ஐப்பசி சதயம்:

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவர் மாமன்னன் ராஜராஜசோழன். இவரது பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வளர்பிறை ஏகாதசி:
ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நாளில் விரத கடைப்பிடிக்க வறுமை நீங்கி, பசிப்பிணி அகலும் .இந்த ஏகாதசி ‘பாபாங்குசா” என அழைக்கப்படுகிறது.

தேய்பிறை ஏகாதசி:

ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியில் விரதமிருந்து வழிபட முன்வினைப் பாவங்கள் நீங்கப் பெறலாம். இந்த ஏகாதசி “இந்திரா ஏகாதசி” என்று அழைக்கப்படுகிறது.

கடைமுகம்:

ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் அனைத்துப் புண்ணிய நதிகளும் காவிரியில் கலப்பதாக ஐதிகம். இந்த தினத்தில் காவிரி நீராடல் புண்ணியம் சேர்க்கும்.

தீபாவளி :

ஐப்பசி மாதம், தேய்பிறை சதுர்த்தசியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படும்.

கந்த சஷ்டி:

ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாக முருகன் மற்றும் சிவ ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடப்படும்.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.