BB Tamil 8: `தோழி செளந்தர்யாவுக்கு நான் சொல்லி அனுப்புன விஷயம்'- `பிக் பாஸ்' விஷ்ணு சொல்வதென்ன?
Vikatan October 23, 2024 01:48 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 8 கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகர் அருண், நடிகை பவித்ரா, மாடல் சௌந்தர்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கியது.

நிகழ்ச்சியில் இதுவரை இரண்டு எவிக்ஷன் நிகழ்ந்துள்ளது. முதல் வாரம் தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேறினார். கடந்த வாரம் நடிகர் அர்னவ் வெளியேறினார். தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் அர்னவ் இருவரின் வெளியேற்றமும் பிக் பாஸ் ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில் ரவீந்தர் எல்லா பிக் பாஸ் சீசன்களையும் ரிவ்யூ செய்து வந்தவர். எனவே இந்த நிகழ்ச்சியின் சூட்சமங்களைத் தெரிந்தவர் என நினைத்தனர். அதேபோல் 'அர்னவ் கேர்ள் பிரண்ட் அன்ஷிதாவுடன் வந்திருப்பதால் கன்டென்ட் தருவார், எனவே போக வாய்ப்பில்லை' என நினைத்தார்கள். ஆனால் இருவரும் வெளியேறிவிட்டனர்.

எது எப்படியோ, இதுவரையிலான இரண்டு வார நிலவரப்படி வெளியில் ஓரளவு ஆதரவு பெற்ற போட்டியாளர் என்றால் சௌந்தர்யாவையும் சொல்கின்றனர். ஆனால் அவர் மீதும் 'சேஃப் கேம் ஆடுகிறார்' என்கிற விமர்சனங்களும் இல்லாமல் இல்லை.

இருந்தாலும், வாக்கு எண்ணிக்கையின் போது லீடிங்கில் வருகிற அரசியல்வாதி போல் இன்றைய தேதிக்கு பிக்பாஸின் நூறு நாள் ஆட்ட கேமில் லீடிங்கில் வாய்ப்பிருப்பவர் சௌந்தர்யா என்கின்றனர்.

ஆனால், இப்போது பிக்பாஸ் வீட்டில் பெண்கள் அணிக்கே ஆகாதவராக ஆகி  விட்டார் சௌந்தர்யா.

இந்நிலையில் சௌந்தர்யாவின் நண்பரும் கடந்த பிக் பாஸ் சீசனில் ஒரு போட்டியாளராக சென்றவருமான விஷ்ணுவிடம் பேசினோம்.

விஷ்ணு

''இப்ப ரெண்டு வாரம் பார்த்ததுல சௌந்தர்யா ஓ.கே.தான். ஆனா இன்னும் கேம்ல இன்வால்வ்மென்ட் வேணும். அந்த இன்வால்வ்மென்ட் கொடுத்தாதான் நமக்கு சப்போர்ட் பண்ணுகிற ஆடியன்ஸும் ஹேப்பி ஆகி ஆதரவு மேலும் அதிகரிக்கும். 'நான் நல்லா  விளையாடுவேன்; ஆனா எனக்கு வாய்ப்பு வரமாட்டேங்குது'ங்கிற மூட்ல இவங்க இருக்காங்க. இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை இப்படி உட்காந்திருந்தா வேலைக்கு ஆகாது. வாய்ப்பை நாம உருவாக்கணும். அல்லது அது வேற யாருக்காச்சும் போகுதுன்னா தட்டிப் பறிக்கணும். எனக்குத் தெரிய இவங்க ஒரு கம்ஃபர்ட் சோன்ல இருக்காங்க. அதை விட்டு வெளியே வரணும்.

'ஒருத்தருடைய இயல்புக்கு மீறி வலிந்து போய் கன்டென்ட் எப்படித் தர முடியும் னு நீங்க கேட்கலாம். அந்த இயல்புக்கு பங்கம் வர்ற ஒரு சூழல் அங்க நிச்சயம் உருவாகும். ஏன்னா நம்மைப் புரிஞ்சுகிட்ட வங்களா அங்க இருக்கப் போறாங்க? இப்ப இந்தச் சூழலை புத்திசாலித்தனமா, அதேநேரம் அந்த நிகழ்ச்சிக்கு நேர்மையா ஹாண்டில் செய்ய தெரிஞ்சா மட்டுமே ஜெயிக்க முடியும்.

சௌந்தர்யா எனக்கு நல்ல தோழி, அதனால் அவங்க கஷ்டப்படுற மாதிரி சூழலை நான் தந்திருக்க மாட்டேன். ஆனா அந்த வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருக்கறதால அந்த மாதிரி சூழல்கள் நிச்சயம் உருவாகும். அதை எதிர்கொள்ளத் தெரிஞ்சுக்கணும். அந்த விஷயத்துல  சௌந்தர்யா கொஞ்சம் வீக்கா இருக்காங்கனு நினைக்கிறேன்.

பிக்பாஸ் வீடு

எல்லா பிக் பாஸ் சீசன் லயும் சாப்பாட்டுப் பிரச்னை இருக்கத்தான் செய்யும். அதை வச்சுதான் போட்டியாளர்களை ட்ரிகர் பண்ண முடியும்னு நினைக்கிறாங்க.வீட்டில் இருக்கிறப்ப சௌந்தர்யா சாப்பாட்டுல அரிசி எடுத்துக்க மாட்டாங்க. ஆனா  பிக்பாஸ் வீட்டுக்குள் போன பிறகும் அப்படியே இருக்க முடியாது. அங்க அரிசிதான் கிடைக்குதுன்னா அதைச் சாப்பிட்டு தான் ஆகணும். வேற வழி கிடையாது.

இந்த மாதிரி சில விஷயங்களை புரிஞ்சுகிட்டாங்கன்னா அடிச்சு ஆடி டாப் 5க்குள் வந்திடுவாங்கனு தோணுது' என்றவரிடம்,

'நிகழ்ச்சிக்குச் செல்கிற போதே இதையெல்லாம் தான் சொல்லிக் கொடுத்திருப்பீங்கதானே' எனக் கேட்டோம்.

'கடந்த ஏழு சீசன் களையும் எடுத்துக்கோங்க..டைட்டில் வென்ற யாருமே 'இப்படிதான் ஆடணும்னு பிளான் பண்ணி எல்லாம் ஜெயிச்சவங்க கிடையாது. இந்த மைன்ட் கேம் அப்படிக் கணிச்சு ஆட முடியாத கேம். நான் போன சீசன்ல முதல் நாள் ஒரு திட்டத்துடன் தான் போனேன். ஆனா ஒரே வாரத்திற்குள் அது ஒர்க் அவுட் ஆகலனு தெரிஞ்சதும் கை விட்டுட்டேன். அதனால நாம என்ன நினைச்சாலும் அது அப்படியே அந்த வீட்டுக்குள் ஒர்க் அவுட் ஆகாது ப்ரோ' என்கிறார்.

இந்த சீசனில் செளந்தர்யா பைனலிஸ்ட் ஆக வருவாரா? உங்கள் கருததை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.