மாமல்லபுரத்தில் காவலாளி மீது தாக்குதல்- 3 பேர் கைது
Top Tamil News October 23, 2024 02:48 AM

மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் பார்க்கிங் ஏரியா செக்குரிட்டியை தாக்கியதாக ஒரே காரில் சுற்றுலா வந்த 2 பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் நோ பார்க்கிங் ஏரியாவில் நிப்பாட்டுவதற்காக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் இருந்த கார் ஒன்று செல்ல முயன்றது. அந்த காரை அங்குள்ள தொல்லியல் துறையின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும், நோ என்ட்ரி ஏரியாவில் காரை நிறுத்தக்கூடாது என்று ஐந்துரதம் வணிக வளாக வாகன நிறுத்துமிட செக்குரிட்டி ஏழுமலை(வயது39) என்பவர் அந்த காரை வழிமறித்து நின்றார். அப்போது செக்குரிட்டி ஏழுமலையை இடிப்பதுபோன்று, அவரின் சொல்லை மீறி அந்த கார் நோ என்ட்ரியில் செல்ல முயன்றது. அப்போது காரில் வந்தவர்களை நோக்கி வாகன நிறுத்துமிட பணியாளர் ஏழுமலை ஏதோ திட்டியதாக தெரிகிறது. உடனே காரில் இருந்து இறங்கிய டிப-;டாப் உடை அணிந்திருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கடுமையாக அவரை தாக்கினர். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதையடுத்து வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளான செக்குரிட்டி ஏழுமலை மாமல்லபுரம் காவல் நிலையத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது புகார் அளித்தார்.  இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், தாக்குதல் நடத்தியவர்கள் விட்டு சென்ற ஒரு அரசியல் கட்சியின் அடையாள அட்டையை, அடையாளம் தாக்குதல் நடத்திய 4 பேர் பற்றி விவரங்களை சேகரித்தனர். பிறகு மாமல்லபுரம் டி.எஸ்.பி. ரவிஅபிராம் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் செக்குரிட்டியை தாக்கியதாக தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்த பிரபு இன்பதாஸ்(41), கீர்த்தனா(வயது29),  மறைமலை நகர் பகுதியை சேர்ந்த சண்முகப்பிரியா(வயது38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் பிரபு இன்பதாஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தலைமறைவாக உள்ள மறைமலைநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது வாகன நிறுத்துமிட செக்குரிட்டி ஏழுமலையை அசிங்கமாக பேசி, கட்டையாலும், கையாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் திருப்போரூர் நீதிமன்றத்தில் நீதிபதி அனுப்பிரியா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பிறகு கீர்த்தனா, சண்முகப்பிரியா இரண்டு பேரை புழல் சிறையிலும், பிரபு இன்பதாசை செங்கல்பட்டு கிளை சிறையிலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.