50 காசு மீதம் தரல... அஞ்சல் துறைக்கு ரூ15,000.50 அபராதம்... நுகர்வோர் ஆணையம் அதிரடி!
Dinamaalai October 23, 2024 05:48 PM


சென்னை கெருகம்பாக்கத்தில் வசித்து வருபவர் மானஷா. இவர் 2023  டிசம்பர்  3 ம் தேதி   கடிதம் அனுப்புவதற்காக பொழிச்சலூரில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் கடிதம் அனுப்புவதற்கு 29 ரூபாய் 50 காசுகள் செலவாகியுள்ளது. அங்கிருந்த தபால் நிலைய அலுவலர் முழுவதுமாக ரூ30  கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். மானஷா தனது 50 காசை திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு கணினியில் முழுமையாக ரூ30 காட்டியதாக ஊழியர்  தெரிவித்துள்ளார்.
மானஷா தான் யுபிஐ மூலமாக சரியான தொகையை (ரூ.29.50) செலுத்துவதாக அந்த அலுவலரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு  அவர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக யுபிஐயில் பணம் செலுத்த முடியாது எனக் கூறிவிட்டார். இதனால் விரக்தியடைந்த மானஷா, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.


இதுகுறித்து மானஷா  , "தினமும் லட்சக்கணக்கான பரிவர்த்தனைகளை செய்யும் இந்தியா போஸ்ட்டில், இதுபோன்று நம்மிடருந்து அதிக அளவில் பணம் பறிப்பதற்கும் வழிவகுக்கும். இதுபோன்ற கறுப்பு பணம், ஜிஎஸ்டியால் அரசுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படலாம்" எனத் தெரிவித்துள்ளார்.


 இச்சம்பவம் குறித்து  தபால் நிலைய அதிகாரிகள் 50 காசுகளுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் கணினியின் மென்பொருள் அதனை முழுமையாக எடுத்துக்கொண்டது தான் உண்மை. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை நிராகரித்தது குறித்து  2023  நவம்பரில்  'பே-யு' க்யூ ஆர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையானது சரியாக இல்லை 2024  மே மாதம் அதன் சேவை நிறுத்தப்பட்டது" எனவும்  விளக்கம் அளித்தது.  
இருதரப்பு வாதங்களுக்கு பிறகு  நுகர்வோர் ஆணையம், மென்பொருள் கோளாறு காரணமாக அதிக கட்டணம் வசூலித்ததாக தபால் துறை ஒப்புக்கொண்டுள்ளது. இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் பிரிவு 2(47) கீழ் நியாமற்ற வர்த்தக நடைமுறையாக கூறியது. இத்துடன் மானஷாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக இழப்பீடாக ரூ.10000ம் , வழக்கு செலவுக்கு ரூ. 5,000மும் அத்துடன்  அவருக்குத் திருப்பித் தரவேண்டிய 50 காசு வழங்கவும் தபால் நிலையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.