நேற்றைய மோசமான சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த பங்குச்சந்தை: நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!
Webdunia Tamil October 23, 2024 05:48 PM


இந்தியா பங்குச்சந்தை நேற்று மிக மோசமாக சரிந்தது என்பதும், சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மோசமாக இருந்த பங்குச்சந்தை இன்று சற்று உயர்ந்து உள்ளதால், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 256 புள்ளிகள் உயர்ந்து 80,475 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 85 புள்ளிகள் உயர்ந்து 24,558 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாட்டா ஸ்டீல், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


Edited by Siva
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.