தீபாவளிக்கு ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகலையா?...இதோ சென்னை-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயிலை அறிவித்தது தெற்கு ரெயில்வே!
Seithipunal Tamil October 23, 2024 11:48 PM

சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு செல்லும் போது கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை யொட்டி  பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, சென்னை சென்டிரல்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு தலைநகர் சென்னை சென்டிரலில் இருந்து வரும் 29 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரெயில் புறப்படும் என்றும், மறுநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில், மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்றும், இந்த ரெயில் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.