அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி! தீவிர சிகிச்சை..!
Seithipunal Tamil October 25, 2024 06:48 AM

திமுக அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் இன்று மதியம் வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.