முடி கொட்டாமலிருக்க முக்கியமான சில ஆலோசனைகள்
Top Tamil News October 27, 2024 09:48 AM

இபோதெல்லாம் முடி கொட்ட ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ளாததும் ஒரு காரணம் .மேலும் முடி கொட்ட என்ன காரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.சிலர் குளித்த பிறகு முடி உதிர காரணமான  சில தவறுகளை செய்கிறார்கள்.
2.அந்தத் தவறுகளால் முடி அதிகமாக உதிர்ந்து இள வயதில் சொட்டையாக இருக்கின்றனர்  


3.சிலர் குளித்து ஈரமான முடியுடன் இருப்பர் .அப்படி குளித்த பிறகு ஈரமான முடியை சீப்பால் சீவக்கூடாது.
4.குளித்து முடித்து ஈரமான முடியை சீப்பினால் சீவினால் அது உடைந்து விழும்.
5.இதற்கு தடிமனான தூரிகை கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்.
6.தலை முடி ஈரமாக இருக்கும்போது உங்கள் தலைமுடியை ஸ்டைல் செய்ய வேண்டாம். ஈரமான கூந்தலில் பலர் ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்தி வருகின்றனர் .
7.அவ்வாறு செய்வது ஆபத்தானது. முடியை நன்கு உலர்த்திய பின்னரே ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்த வேண்டும். 8.ஈரமான தலைமுடியில் டவலைக் கட்டிக்கொள்ளும் பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி செய்வதால் முடி உடைந்து,ஆரோக்கியமற்ற முடியாக இருக்கும்  

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.