“திராவிடம் மாடல்னு சொல்லி ஏமாத்துறாங்க”… குடும்ப அரசியல் செய்யும் அந்தக் கட்சிதான் முதல் எதிரி…. விஜய் அதிரடி..!!
SeithiSolai Tamil October 28, 2024 01:48 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கிவிட்ட நிலையில் தற்போது தலைவர் விஜய் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்ததற்கான காரணத்தை கூறினார். அதாவது சும்மா நடித்துவிட்டு மட்டும் போகலாம். ஆனால் நமக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலுக்கு வந்ததாக தெரிவித்த அவர் தற்போது மிகவும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் நாங்கள் முடிவெடுத்திருக்கிற இந்த நிறத்தை தவிர வேறு எந்த நிறத்தையும் எங்கள் மீது பூச முடியாது. மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி ஏமாற்றுகிறார்கள்.

குடும்ப அரசியல் செய்து ஊழலில் ஈடுபடும் அந்த கட்சிதான் அரசியலில் நம்முடைய முதல் எதிரி என்று கூறினார். மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் தான் திராவிடம் என்று கூறி வருகிறார்கள். அதோடு ஏற்கனவே வாரிசு அரசியல் நடப்பதாக திமுகவினரை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் தற்போது நடிகர் விஜயும் குடும்ப ஆட்சி செய்யும் கட்சி என்று மறைமுகமாக திமுகவை சாடி உள்ளதோடு அந்த கட்சிதான் முதல் எதிரி என்று கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.