கூத்தாடின்னா கேவலமா? எம்ஜிஆரும், என்டிஆரும் எப்படி வந்தாங்க? விஜய் விளாசல்
Tamil Minutes October 28, 2024 01:48 AM

விக்கிரவாண்டியில் விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தெறிக்க விட்டது. ரசிகர்களைத் தொண்டர்களாக்கிய விஜய் அடுத்து அவர்களை வாக்கு வங்கிகளாக மாற்ற மகத்தான சில திட்டங்களை வகுத்துள்ளார்.

அவர் தான் சினிமாவில் இருந்து வந்ததால் சிலர் கூத்தாடின்னு சொல்வாங்க. ஆனா அதுக்கு அர்த்தமே வேற என்ற லெவலில் பேசி அசத்தியுள்ளார். வேறு என்னென்ன சொல்றாருன்னு பாருங்க.

கூத்தாடிங்கற பேரு நமக்கு மட்டும் வந்ததில்லை. அன்னைக்கு எம்ஜிஆரையும், ஆந்திராவுல என்டிஆரையும் அப்பவே இப்படித் தான் சொன்னாங்க. தமிழர்களோட கலை, பண்பாடு, வாழ்வியல், கலை தான் சினிமா. வெறும் பொழுதுபோக்கு கிடையாது.

vijay

கூத்தாடின்னா கேவலமான பேரா? கெட்ட வார்த்தையா? கூத்து சத்தியத்தைப் பேசும். உண்மையைப் பேசும். உணர்வுகளைப் பேசும். எல்லாத்தையும் கொண்டாட்டமா பேசும். கூத்தாடி உள்ள இருக்குற கோபம் கொப்பளிச்சா யாராலயும் கண்ட்ரோல் பண்ண முடியாது.

அதனால தான் மக்கள் கூட்டம் பார்த்தா கொண்டாடும். ஆரம்பத்துல நான் சினிமாவுக்கு வந்த போது மூஞ்சி சரியில்ல முடி சரியில்லன்னாங்க. ஆனா எல்லாத்தையும் தாண்டி உழைச்சித் தான் இன்னைக்கு உங்க முன்னாடி நிக்கிறேன். அதுக்குக் காரணம் நீங்க தான்.

இன்னைக்கு உங்கக்கிட்ட பொறுப்புள்ள தொணடனா நிக்கிறேன். ஆனா நாளைக்கு? அதை நான் சொல்லத் தேவையில்லன்னு நினைக்கிறேன். என் பொறுப்பு எதுன்னு டிசைடு பண்றதே நீங்க தான்.

எங்கிட்ட இருக்குறது எல்லாம் உண்மை உழைப்பு, உயர்வு தான். இதோ அரசியல் களத்துக்கு அழைச்சிட்டு வந்துருக்கீங்க. அதோட ரிசல்ட் நீங்க தான். தமிழக வெற்றிக்கழகத்தின் மூலம் புதியதோர் விதி என செய்வோம். மக்களோடு மக்களா இனி நாம நிக்கப் போறோம்.

நம்மை அவங்க சிங்கிள் மெஜாரிட்டியா ஜெயிக்க வைப்பாங்கங்கற நம்பிக்கை 100 சதவீதம் இருக்கு. அதே நேரம் நமது செயல்பாட்டை நம்பி நம்மோடு வர்றவங்களும் இருக்கலாம். நம்மை நம்பி இணைந்து வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு தரப்படும்.

2026ல் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். எங்களது அரசியல் எதிரியா இருந்தாலும் சரி. ஐடியாலஜி எதிரியா இருந்தாலும் சரி. டீசன்ட் அப்ரோச். டீசன்ட் அட்டாக். இவ்வாறு அவர் பேசினார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.