ஆகா! செம்ம டிவிஸ்ட்! உதயநிதியின் நேர் எதிரியிடமிருந்து விஜய்க்கு வந்த வாழ்த்து! இனிதான் ஆட்டமே!
Seithipunal Tamil October 29, 2024 03:48 AM

விக்கிரவாண்டி, வி.சாலையில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, கோட்பாட்டை வெளியிட்ட விஜய், பாஜக மற்றும் திமுக தான் தங்களின் இரு அரசியல் எதிரிகள் என்றும் தெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு, பாஜகவின் கூட்டணி கட்சி தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்து டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், "துறவிகள் மற்றும் சித்தர்களின் பூமியான தமிழகத்தில், புதிய ஒரு அரசியல் பயணத்தைத் தொடங்கியதற்காக நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் உதயநிதிக்கு எதிராக மறைமுக எதிர் அரசியலை கையிலுடுத்துள்ள ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், நடிகர் விஜய்க்கு வருங்காலங்களில் அரசியல் ரீதியான சில உதவிகளை செய்து, திமுகவை தோற்கடிக்க வியூகங்களை வகுப்பார் என்றும் அரசியல் விமர்சசர்கள் கருது தெரிவித்து வருகின்றனர். 
 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.