மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் குர்ஜார் என்பவரது மூன்று வயது மகள் ரிதிமா அவர்களது பண்ணை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய் உள்ளார்.
அருகில் தான் சிறுமி விளையாடிக் கொண்டிருப்பார் என்று பெற்றோர் நினைத்து விட்டு அஜாக்கிரதையாக இருந்து விட்டனர். ஆனால் வெகு நேரமாகியும் குழந்தையை காணாததால் பல இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது அதே பகுதியில் இருந்த நீச்சல் குளத்தில் சிறுமி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோரின் அலட்சியத்தால் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.