சென்னையில் திடீர் கனமழை.. சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களுக்கு சிக்கல்..!
WEBDUNIA TAMIL October 30, 2024 10:48 PM


சென்னையின் முக்கிய பகுதிகளில் திடீரென கன மழை பெய்து வருவதால், சென்னை நகரம் திடீரென குளிர்ச்சியாக மாறி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக காலையில் வெயில் கொளுத்த தொடங்கிய நிலையில், மாலையில் மட்டும் குளிர்ந்த காற்று வீசுயது. இன்றும் காலை வெயிலுடன் தொடங்கிய நிலையில், சற்று முன்னர் திடீரென வானிலை மாறி இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், இன்று முழுநாளும் மழை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் காலையில் வெயிலும் இரவில் சில நேரங்களில் மிதமான மழையும் பெய்து வந்த நிலையில், இன்றைய காலை மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

இருப்பினும் தீபாவளிக்காக சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள் மழை காரணமாக அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.


Edited by Mahendran
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.