ஆந்திராவில் மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் பலியான சம்பவம் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உண்டராஜவரம் மண்டலம் சூர்யாறுபாலம் கிராமத்தில் பட்டாசு தயாரிக்கு மையத்தில் தீபாவளி என்பதால் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கு பணியில் ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில் திடிரென மாலை 3.30 மணிக்கு பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியது. இதில் ஆலை முற்றிலும் எரிந்து சேதமான நிலையில் இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். ஐந்து பெண்கள் பலத்த காயமடைந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.