பிக் பாஸ் 8: இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. எரிச்சல் அடைய வைத்த அன்ஸிதா.. ஒரே போடாக ஆஃப் செய்த ஜாக்குலின்..
Tamil Minutes October 31, 2024 02:48 AM

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்று நிறைய இடங்களில் சுவாரஸ்யத்தையும், சில இடங்களில் பிரச்சனையை உருவாக்கும் வகையிலும் அமைந்திருந்தது. Swap டாஸ்க் என்ற பெயரில் ஒரு போட்டியாளர் சக போட்டியாளரை போல பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. உதாரணத்திற்கு சாச்சனாவாக இருக்கும் சுனிதா, அந்த டாஸ்க் முடிவது வரை அவரை போலவே இருந்து அவர் செய்வதை தான் செய்ய வேண்டும் என சில விதிகளுடன் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆண்கள் அணியில் ஜெஃப்ரி தீபக்காகவும், ரஞ்சித் ஜெஃப்ரியாகவும், விஷால் முத்துக்குமரனாகவும் வலம் வந்திருந்தனர். இன்னொரு பக்கம், பெண்கள் அணியில் தர்ஷிகா பவித்ராவை போலவும், சவுந்தர்யா சுனிதாவை போலவும், ஆனந்தி சவுந்தர்யாவை போலவும் வலம் வந்தபடி இருந்தனர். இதில் ஒருவரை போல மற்றொருவர் செய்வது சுவாரஸ்யமாக தான் இருந்தது. ஆனால், அதே நேரத்தில் சிலரை போல வலம் வரும் போது அவர்கள் செய்யாத விஷயத்தை வேண்டுமென்றே குத்திக் கட்டுவதற்காக செய்வதும் பிரச்சனையை உருவாக்கி இருந்தது.

அப்படி தான் ஜாக்குலின் மற்றும் அன்ஸிதா ஆகியோருக்கிடையே ஒரு பிரச்சனை வெடித்திருந்தது. இதில் அன்ஸிதாவாக ஜாக்குலினும், ஜாக்குலினாக அன்ஸிதாவும் மாறி மாறி நடித்திருந்தனர். அப்போது அன்ஷிதாவாக இருந்த ஜாக்குலின் எதையோ சமைத்துக் கொண்டிருக்க அந்த சமயத்தில் ஜாக்குலின் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அன்ஸிதா, ‘அன்சி கொதிச்சிடுச்சா என ரியல் ஜாக்குலினிடம் கேட்கிறார். இதனை கேட்டதும் டென்ஷனான ஜாக்குலின், ‘நீ வேணா வந்து கொதிக்கிறியா. நான் ஒரு வேலை பார்க்கிறேன்ல. அத நானே பாத்துக்குறேன். நீ கொஞ்சம் வாயை மூடிட்டு உட்காரு’ என கோபமாக கூறுகிறார்.

இதனைக் கேட்டதும் ஜாக்குலினாக பேசும் அன்ஸிதா, நேற்று வரை வாயை மூடு என்றெல்லாம் அன்ஸிதா பேசவில்லை என்றும் நீங்களே ஏன் அதை பிரதிபலிக்கிறீர்கள் என்றும் ஜாக்குலினிடம் கேட்கிறார். இப்படி மாறி மாறி இருவரும் தங்களது கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, அதில் இருக்கும் குறைகளை வைத்து அவர்கள் நடித்துக் காட்டுவதே பிரச்சனையாக மாறிவிட்டது.

ஜாக்குலினிடம் இருக்கும் தவறுகளை அவரைப்போல நடிக்கும் அன்ஸிதா செய்து கொண்டே இருக்க இதனால் ஜாக்குலின் எரிச்சல் அடைந்ததாகவும் தெரிகிறது. மேலும் தான் செய்யாத விஷயங்களை எல்லாம் அன்ஸிதா செய்ததாக ஜாக்குலின் கடுப்பில் கூற, இன்னொரு புறம் அவரை போல நடித்துக் கொண்டிருக்கிறார் அன்ஸிதா.

அதிலும் ஜாக்குலின் அடிக்கடி தனியாக பேசி சிரிப்பது போல அன்ஸிதா செய்து காட்ட பார்வையாளர்களுக்கே ஒரு வித வெறுப்பு வந்து விடுகிறது. ஒருவரை போல நடிக்கும் போது இப்படியா வேண்டுமென்றே அவர்களை மட்டம் தட்டிக்கொண்டு அவர்களை போல செய்து காட்ட வேண்டும் என பலரும் பல விதமான கருத்துக்களை அன்ஸிதாவுக்கு எதிராக தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.