உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியல் வெளியானது. அதில் பாகிஸ்தானின் லாகூர் முதலிடத்தை பிடித்துள்ளது. லாகூரில் காற்று தர குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகி இருக்கிறது. எனவே சுகாதாரத் துறை அதிகாரிகள் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த காற்றின் தரம் மோசமாக இருப்பதால் வைரஸ் காய்ச்சல், இருமல், தொண்டை புண் உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே முகமூடிகள் மற்றும் கண்ணாடிகளை அணிந்து வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவையில்லாத காரணங்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் எனவும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.