தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு கடந்த 27 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, கோட்பாடு, கொள்கை தலைவர்களை விஜய் அறிவித்துள்ளார்.
மேலும், பாஜக, திமுக தான் தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் எதிரிகள் என்றும் விஜய் அறிவித்ததுடன், கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக விஜய பிரபாகரன் விஜய் மாநாடு குறித்து தெரிவிக்கையில், விஜயகாந்தை எடுத்துக்காட்டாக முன்வைத்து விஜய் மாநாடு நடத்தியுள்ளார்.
நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் விஜய் மாநாடு நடத்தியுள்ளார், வாழ்த்துகள். விஜயகாந்த் தலைமையில் நடந்த மாநாட்டை தினமும் நினைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு மாநாடு நடக்கும்போது நினைவுகளை சுட்டிக் காட்டுவது வழக்கம்" என்று தெரிவித்துள்ளார்.