ராமநாதபுரம் மாவட்டம்,பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்று (அக்டோபர் 30) பாஜக சார்பில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச். ராஜா, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில துணைத்தலைவரும் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, மாநில பொதுச்செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முன்ன தாக மதுரை கோ ரிப்பாளையத்தில் அமைந்துள்ள தெய்வத்திருமகன் தேவர் பெ ருமகனாரின் திருவுருவச் சிலைக்கு பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முத்துராமலிங்க தேவரின்117வது பிறந்த தினமும், 62வது குருபூஜை விழாவும் இன்று கடைப்பிடிக்கப் படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் பாஜக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இது குறித்து ஹெச். ராஜா தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது…
ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தின் இரண்டாவது தலைவரான பரமபூஜனீய ஸ்ரீகுருஜி கோல்வால்கர் அவர்கள் மீதும், இந்துத்வாவின் பிதாமகன் வீரசாவர்க்கர் அவர்கள் மீதும், மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் மீதும் பேரன்பும், பெருமதிப்பும் கொண்ட …
தேசியமும் தெய்வீமும் எனது இரு கண்கள் எனக்கூறி தமிழகத்தில் தேசியம் வளர்க்க! தெய்வீகம் காக்க! தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த விடுதலை போராட்ட வீரர் தெய்வத் திருமகன் தேவர் பெருமகனாரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது அவதாரத் தலமான பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்திற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் திரு. MLA, மாநில பொதுச் செயலாளர், திரு. , மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு.கதலி நரசிங்க பெருமாள், இராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி திரு.முருகேசன், மாவட்ட பொதுச் செயலாளர் திரு.ஆத்மா கார்த்திக், சகோதரி திருமதி.கோமதி நாச்சியார் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நான் கடந்த 30 வருடங்களாக புண்ணிய பூமி பசும்பொன் கிராமத்திற்கு தேவர் பூஜைக்கு சென்று வழிபாடு செய்து வருகிறேன்.
தெய்வத் திருமகன் தேவர் பெருமகனாரின் ஜெயந்தி தினத்தில் அவரது தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குகிறேன்.
இந்திய தேசிய இராணுவத்தை கட்டமைத்த மாவீரன் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் நண்பரும் விடுதலை போராட்ட வீரருமான தெய்வத் திருமகன் தேவர் பெருமகனாரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு.
தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் திரு. MLA, மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு., மாநில பொதுச் செயலாளர், திரு. , மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு.கதலி நரசிங்க பெருமாள் மதுரை மாவட்ட தலைவர் திரு.மகா.சுசீந்திரன், மீனவர் பிரிவு மாநில செயலாளர் திரு.சிவ.பிரபாகரன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
News First Appeared in