விண்டேஜ் மூட் ல STR வந்தா செம்ம சீன்-u.. BTS காட்சிகளுடன் தீபாவளி வாழ்த்து கூறிய சிம்பு படக்குழு..!
ttncinema October 31, 2024 03:48 AM

சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே" என்ற படத்தை இயக்கியுள்ளார். தற்போது பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகி வரும் "டிராகன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு, அவர் சிம்புவின் படத்தை இயக்குவார் என்ற அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் 27 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

இப்படத்தில் "கட்டம் கட்டி கலக்குறோம்" என்ற கேப்ஷனையும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 90ஸ் சிம்புவை மீண்டும் கொண்டுவர உள்ளதாகவும் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், முதல் தோற்றத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் டின் BTS காட்சிகளை பகிர்ந்துள்ள ஏஜிஎஸ் நிறுவனம், விண்டேஜ் மூட் ல STR வந்தா செம்ம சீன்-u..  என பதிவிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.