தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் கடந்த 27ஆம் தேதி முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்த மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் ஏராளமானவர் கலந்து கொண்டனர். ஒரு நாள் முன்னதாகவே விழுப்புரம் மாவட்டம் வி சாலைக்கு சென்ற விஜய் அங்கே ஏன் தங்குகிறது மாநாட்டு பணிகளை கவனித்தார். அந்த மாநாட்டில் நடிகர் விஜய் பாஜகவை மறைமுகமாக தாக்கி பேசிய நிலையில் திமுகவை நேரடியாகவே அரசியல் எதிரி என்று அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் முதலில் மாநாடு ஆரம்பித்தபோது தெரிந்துகொள் வந்த விஜய் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். இதில் தற்போது ஒரு திடீர் சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது தில்லையாடி வள்ளியம்மை புகைப்படத்திற்கு பதிலாக மொழிப்போர் தியாகிகளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி புகைப்படத்தை வைத்துள்ளனர். மேலும் தில்லையாடி வள்ளியம்மை என்று அந்த புகைப்படத்தில் எழுதப்பட்டிருந்த நிலையில் அதில் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உடையது. இந்த புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி விஜய் கட்சியை விமர்சித்து வருகிறார்கள்.