இந்தூர் கஜ்ரானா பகுதியில் உள்ள மும்தாஜ் காலணியில் வசித்து வந்தவர் 22 வயது இளைஞர் ராஜ் பிரஜாபதி. இவர் கடந்த திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரஜாபதியின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த சில தினங்களாகவே பிரஜாபதி கடன் பிரச்சனையில் இருந்ததும் சமீபத்தில் அவர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுதான் என்று உறுதியாக தெரியவராத நிலையில் மிகுந்த மன அழுத்தத்தினால் பிரஜாபதி இத்தகைய முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.