2 கோடி தரலைன்னா.. சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!
Webdunia Tamil October 31, 2024 12:48 PM

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் பிரபலமான கான் நடிகர்களில் முக்கியமானவர் சல்மான்கான். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சல்மான்கான் வீட்டின் முன்னால் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 3 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இதன் பின்னணியில் பிஷ்னோய் கும்பல் இருப்பது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து சில நாட்கள் கழித்து மும்பை போக்குவரத்து போலீஸ்க்கு வந்த எச்சரிக்கை குறுஞ்செய்தியில் 5 கோடி தராவிட்டால் சல்மான்கானை கொலை செய்வதாக மிரட்டல் வந்தது. உடனடியாக அந்த மொபைல் எண்ணை ட்ராக் செய்து போலீஸார் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர்.

இந்நிலையில் தற்போது மும்பை போக்குவரத்து போலீஸுக்கு மீண்டும் ஒரு கொலை மிரட்டல் செய்து வந்துள்ளது. அதில் 2 கோடி தராவிட்டால் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் வந்துள்ளது. குறுஞ்செய்தி அனுப்பிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர். தொடர்ந்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடப்படுவது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.