IPL 2025: ஐபிஎல் அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்… எத்தனை கோடிக்கு தெரியுமா…? முழு லிஸ்ட் ஏதோ..!!!
SeithiSolai Tamil November 01, 2024 04:48 AM

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த வருடம் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அதன்படி அடுத்த மாத இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 5 வீரர்கள் வரை தக்க வைக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்தது. அதன்படி அணிகள் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ் தோனியை 4 கோடி ரூபாய்க்கு UNCAPPED PLAYER விதிமுறையில் தக்க வைத்துள்ளது. இதேபோன்று சென்னை அணியில் ஜடேஜாவை 18 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும், 12 கோடி ரூபாய்க்கு சிவம் துபே, 18 கோடி ரூபாய்க்கு ருதுராஜ் கெய்க்வாட்டையும், மதிஷா பத்திரனாவை 13 கோடி ரூபாய்க்கும் சிஎஸ்கே தக்க வைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துள்ள 5 வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் ரோகித் சர்மாவை 16.30 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோன்று ஹர்திக் பாண்டியாவை 16.35 கோடி ரூபாய்க்கும், சூரியகுமார் யாதவை 16.35 கோடி ரூபாய்க்கும், திலக் வர்மாவை 8 கோடி ரூபாய்க்கும், பும்ராவை 18 கோடி ரூபாய்க்கும் மும்பை அணி தக்க வைத்துள்ளது.

அதன் பிறகு ஆர்சிபி அணியில் மீண்டும் விராட் கோலி விளையாடும் நிலையில் 22 கோடி வரையில் அவரை தக்க வைத்துள்ளது. ஐபிஎல் போட்டியில் மிகவும் அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதேபோன்று ரஜத் படிதாரை 11 கோடி ரூபாய்க்கும், யாஷ் தயாலை 5 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. இந்த அணி மொத்தமே 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ள நிலையில் பஞ்சாப் அணி 2 வீரர்கள் மட்டுமே தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது. அதன்படி பஞ்சாப் அணியில் ஷஷாங்க் சிங் 5.5 கோடி ரூபாய் க்கும், ப்ர்ப்ஷிம்ரன் சிங்கை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. இதன் மூலம் எதிர்வரும் மெகா ஏலத்தில் 110.50 கோடியுடன் அதிக தொகை கொண்ட அணியாக ஏலத்தில் வலம் வரும் அணியாக பஞ்சாப் இருக்கும்.

அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனை 18 கோடி ரூபாய்க்கும், ஜெய்ஸ்வாலை 18 கோடி ரூபாய்க்கும்,துருவ் ஜுரேலை 14 கோடி ரூபாய்க்கும், ஹெட்மயரை 11 கோடி ரூபாய்க்கும், சந்திப் ஷர்மாவை 5 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது. இந்த அணி கிட்டத்தட்ட 6 வீரர்கள் வரை அதிகமான தொகைக்கு தக்க வைத்துள்ளதால் எதிர்வரும் ஏலத்தில் குறைந்த தொகையுடன் தான் கலந்து கொள்ள முடியும். அதன் பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அக்சர்படேலை 16.5 கோடி ரூபாய்க்கும், குல்தீப் யாதவை 13.25 கோடி ரூபாய்க்கும், ட்ரிஸ்டன் ஸ்டப்சை 10 கோடி ரூபாய்க்கும், அபிஷேக் போரேலை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது.

அதே சமயத்தில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்டை டெல்லி அணி விடுவித்து விட்டது. அதன் பிறகு கொல்கத்தா அணியிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்ரேயஸ் ஐயர் விடுவிக்கப்பட்ட நிலையில் அந்த அணி கிட்டத்தட்ட 6 வீரர்களை தக்க வைத்துள்ளது. அதன்படி ரிங்கு சிங்கை 13 கோடி ரூபாய்க்கும், வருண் சக்கரவர்த்தியை 12 கோடி ரூபாய்க்கும், சுனில் நரைனை 12 கோடி ரூபாய்க்கும், ரஸ்ஸலை 12 கோடி ரூபாய்க்கும், ஹர்சித் ராணாவை 4 கோடி ரூபாய் க்கும், ரமன்தீப் சிங்கை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளது.

இதேபோன்று ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக 23 கோடி ரூபாய்க்கு ஹென்ரிச் கிளாஸன் தக்கவைக்கப்பட்டுள்ளார். இவர்தான் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு தக்க வைக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதேபோன்று இந்திய வீரர்களில் விராட் கோலி 22 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு 18 கோடி ரூபாய்க்கு கம்மின்சையும், ட்ராவிஸ் ஹெட்டை 14 கோடி ரூபாய்க்கும், அபிஷேக் ஷர்மாவை 14 கோடி ரூபாய்க்கும், நித்திஷ் ரெட்டியை 8 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்துள்ளனர்.

 

 

 

அதன் பிறகு லக்னோ அணியில் கேப்டன் கே.எல் ராகுல் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அணி 5 வீரர்கள் வரை தக்க வைத்துள்ளது. அதன்படி நிக்கோலஸ் பூரணை 12 கோடி ரூபாய்க்கும், ரவி பிஷ்னோயை 11 கோடி ரூபாய்க்கும், மயங்க் யாதவை 11 கோடி ரூபாய்க்கும், மோசின் கானை 4 கோடி ரூபாய்க்கும், ஆயுஷ் பதோனியை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளனர். மேலும் குஜராத் அணியில் சுப்மன் கில்லை 16.50 கோடி ரூபாய், ரக்ஷித் கானை 18 கோடி ரூபாய்க்கும், சாய் சுதர்சனை 8.50 கோடி ரூபாய்க்கும், ராகுல் தெவாட்டியாவை 4 கோடி ரூபாய்க்கும், ஷாருக்கானை 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.