திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. அவர் சிறையில் இருக்கும் போது தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில் அவர் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பதவி வழங்கினார்.
அவர் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அதிமுக கட்சியை சேர்ந்த பல முக்கிய பிள்ளைகள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்வு அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு சால்வை அணிந்ததோடு திமுக உறுப்பினர் அடையாள அட்டைகளை செந்தில் பாலாஜி வழங்கினார். 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அதனை முன்னிட்டு தற்போதைய கட்சி பணிகளை மேற்கொள்ளுமாறு செந்தில் பாலாஜி அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.